வணக்கம்
250 லட்சாதிபதிகள் உருவாக வழிவகை செய்யும் பதிவு இது
250 நபர்கள் இணைந்து ஒவ்வொருவரும் ரூ.3000 முதலீடு செய்வதால் ரூ.750,000 முதலீடு தயாராக இருக்கும்
என்ன தொழில் துவங்குவது ?
இணையதளம்
இணையதளத்தில் என்ன விற்பனை செய்வது ?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான ஆடைகள்
ஏன் ஆடைகள் ?
1. எப்போதும் தேவை உள்ள தொழில்
2 .இந்திய ஆடைகள் விற்பனை சந்தை மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
3. இந்தியாவில் 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்
4. தமிழகத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்
5. நம் தமிழகத்திலோ , இந்தியாவிலோ 1 சதவிகித மக்களை வாடிக்கையாளராக பெற்றால் கூட மிகபெரிய நிறுவனமாக வளர்ந்து விடலாம் ( அவ்வளவு எளிதானது அல்ல ஆனால் சாத்தியமே )
இணையதள தொழில் துவங்க தேவையான ஆவணங்கள் என்ன ?
பான் அட்டை , GST , வங்கிநடப்பு கணக்கு
முதலீட்டிற்கு வழிசெய்து விட்டோம்
என்ன தொழில் என்று தெரிந்துவிட்டது
எவ்வளவு பெரிய சந்தை என்பதும் கண்முன்னே தெரிகிறது
இனி , இந்திய ஆடைகள் விற்பனை சந்தையில் அடையாளத்தை , வியாபார வாய்ப்பை உருவாக்குவது
மொத்த முதலீட்டை 5 பங்குகளாக பிரித்து கையாள்வது
முதல் பங்கு ஆடைகள் விற்பனைக்கான இணையதளத்தை துவக்க
இரண்டாவது பங்கு அடுத்து ஒரு வருடத்திற்கு இணையதளத்தை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய
மூன்றாவது பங்கு இணையதளத்தில் வருங்கால வசதிகளை செய்யவும் செயலியை வடிவமைக்கவும்
நான்காவது + ஐந்தாவது பங்கு தேவையெனில் அலுவலகம் அமைக்க மற்றும் பணியாட்கள் சம்பளத்திற்கு
முடிந்தவரை முதலீட்டாளர்களில் ஒருவரின் வீட்டின் அல்லது அலுவலகத்தின் ஒரு சிறிய பகுதியை வாடகைக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் உங்களில் ஒருவருக்கு வருமானம் கிடைக்கும்
பணியாட்களை வெளியில் இருந்து அமர்த்தி கொள்ளுங்கள்
அடுத்து என்ன செய்ய வேண்டும் ?
பணியாட்களை கொண்டு ஜவுளி கடைகளில் உள்ள ஆடைகளை நல்ல தரமான புகைப்படங்களாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது
அடுத்து என்ன செய்ய வேண்டும் ?
டெலிவரி , கொரியர் பார்ட்னர்களை இணைப்பது ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் அமைத்து கொள்ளவும்
அடுத்து என்ன செய்ய வேண்டும் ?
மேலே சொன்ன வேலைகள் நிறைவானதும் மற்ற வேலைகளை தெளிவாக திட்டமிடுங்கள் யார் எந்த வேலைகளை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது குறித்து
அடுத்து என்ன செய்ய வேண்டும் ?
விளம்பரம் அனைத்து தொழில்களின் இதயம் என்று விளம்பரத்தை சொல்லலாம்
அனைவரும் சமூக ஊடகங்களில் தினமும் இணையதளத்தை குறித்து பதிவிடுங்கள்
ஒரு ஊடகத்தில்
250 நபர்கள் x 2 பதிவு = 500 பதிவுகள்
X 30 நாட்கள் = 15000 பதிவுகள்
இரண்டு ஊடகத்தில் என்றால் 30 நாட்களில் 30000 பதிவுகள்
250 முதலீட்டாளர்களும் இந்தியாவில் உள்ள அனைத்து சமூக ஊடகங்களையும் பதிவிறக்கம் செய்து கணக்கு வைத்து கொள்ளுங்கள் நீங்கள் அனைவரும் இணைந்து ஒரு குழுவை அமைத்து இணையதளத்தை முன்னேற்றுவது எப்படி என்பது குறித்து மட்டுமே பேசுங்கள் இன்னொரு குழுவை துவக்கி இணையதளத்தில் என்ன சலுகைகள் , ஆடைகளின் புகைப்படங்கள் மட்டும் இருக்கும்படி அமைக்கவும் இரண்டாவது குழுவை எல்லா சமூகஊடகங்களில் பகிரவும்
இப்போது செலவு இல்லாமல்
ஒரு லட்சம் நபர்களுக்கும் மேல் விளம்பரம் தினமும் சென்றடைய இந்த வழிமுறையை பயன்படுத்துங்கள்
வாடிக்கையாளர் கேட்கும் சந்தேகங்களுக்கு முடிந்த வரை சரியாக , வேகமாக தகவல் தெரிவியுங்கள்
கல்லூரி மாணவர்கள்
நண்பர்கள் குழு
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழில் செய்வது பொருத்தமானது எதை எதையோ சேர்ந்து செய்கிறோம் இனி தொழிலை இணைந்து செய்யுங்கள்
முன்னேறுங்கள்
தொடர்புக்கு
publicbazaar@gmail.com
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக