சிவ சிவ
வணக்கம் ,வீட்டில் இருந்தே காய்கறி விற்பனை செய்வதன் மூலம் மாதம்
ரூ.5000 + மற்றும் மேலே சம்பாதிக்கலாம்
தொழிலை நீங்கள் ஆரம்பிக்க ரூ.5000/- முதலீடு + 25 சதுர அடி இடம்போதுமானது
இந்த வியாபாரத்தில் 30 குடும்பங்கள் உங்கள் வாடிக்கையாளராக அமைந்தால் நிச்சயமாக மாத வருமானம் ரூ.5000 +
30 x 500 கிராம் = 15 கிலோ
1 கிலோவிற்கு = ரூ10 லாபம்
15 கிலோ x ரூ 10 = ரூ150 தினசரி
இந்த வருமான கணக்கு காய்கறிகளுக்கு மட்டும் , அதே 30 குடும்பங்களுக்கு தேவையான பழங்கள் , மளிகை சாமான்கள் , இட்லி மாவு , பசும்பால் , ரெடிமேட் சப்பாத்தி , விற்பனை செய்து மாத வருமானம் ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம்
30 குடும்பங்களை எப்படி உங்கள் வாடிக்கையாளரக உருவாக்குவது ?
பக்கத்துல தெரிஞ்சவங்ககிட்ட நீங்க ஆரம்பிக்க இருக்கும் வீட்டு
பசுமை கடை ( இந்த தொழிலுக்கு எனக்கு பிடித்த பெயர் ) பற்றி பேசுங்கள்
துவங்கும் போது காய்கறிகளை மட்டும் வைத்து தொழில் ஆரம்பிங்க எப்படி வியாபாரம் நடக்கிறது என்று தெரிந்து அதற்கு ஏற்றவாறு காய்கறிகளின் அளவுகள் மற்றும் மற்ற பொருள்களை இதனுடன் இணைக்கலாமா ? இல்லையா ? என்று ஒரு திட்டம் கிடைக்கும் கிடைக்கின்ற அனுபவத்தை வைத்து தொழிலை எப்படி அடுத்த படிக்கு கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்யுங்கள்
முதல் 30 வாடிக்கையாளரை தக்க வைத்து கொண்டால் உங்களின் நடவடிக்கை , சேவை , பொருளின் தரம் , நியாயமான விலை , சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு பஞ்சம் இருக்காது
இந்த தொழிலில் உள்ள சாதக பாதகங்களை பார்க்கலாம்
சாதகங்கள்
பெண்களுக்கு ஏற்றது
குறைந்த முதலீடு
தினசரி தேவைப்படும் அத்தியாவசிய பொருள் நல்ல லாபம் , உடனடி வருமானம்
பாதகங்கள்
வேகமாக கெட்டு போக கூடியது
காய்கறிகளையும் இடத்தையும் தினசரி சுத்தப்படுத்த வேண்டும்
மழை , வெயில் , எந்த விழா விடுமுறை நாட்களிலும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்
யாருக்கு பொருத்தமானது ?
பொறுமை உள்ளவர்கள்
பெண்கள் மற்றும் வீட்டில் இருந்து வருமானம் தேடுபவர்கள்
கணக்கறிவு கொஞ்சம் தேவை
எந்த தொழிலையும் சிறிதாக துவக்கி திட்டமிட்டு பெரிதாக மாற்றலாம்
தொடர்புக்கு
publicbazaar@gmail.com
சிவ சிவ
நன்றி .
கருத்துகள்
கருத்துரையிடுக