வணக்கம்,
இன்று காய்கறி விற்பனை பற்றி பார்க்கலாம்,
குறிப்பு :- இது பெண்களுக்கு பொருத்தமான தொழில்.
காலை 05:30 முதல் 08:00 மணி வரை
அல்லது மாலை 05:30 முதல் இரவு 09:00 வரை விற்பனை செய்யலாம்
உங்கள் வீட்டருகில் அதிக மக்கள் நடக்கும் பாதையில் கடையை அமைத்து கொள்ளுங்கள்
5 X 5 = 25 சதுர அடி இடம் போதுமானது.
- : காய்கறி கடை துவங்க
தேவையான பொருட்கள் :-
கைத் தராசு அல்லது சிறிய எலக்ட்ரானிக் தராசு
4 X 4 சதுர அடி அளவுள்ள டேபிள்
( வீட்டில் உள்ளதை பயன் படுத்துங்கள் ) அல்லது ( பழைய டேபிள் வாங்குவது )
3 X 4 சதுர அடி அளவுள்ள கரும்பலகை
( தினசரி காய்கறி விலையை எழுத )
சாக்பீஸ் கொஞ்சம், பணம் போட்டு வைக்க ஒரு பெட்டி,
- : தொழில் செய்யும் முறை : -
காய்கறி சந்தைக்கு சென்று மொத்த வியாபாரிகளிடம் முடிந்த வரை நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுத்து குறைந்த விலைக்கு வாங்குங்கள் வீட்டிற்கு வந்து நீரில் 2 அல்லது 3 முறை கழுவி சுத்தம் செய்யுங்கள்
கடையை தயார் செய்து கொண்டு விற்பனை செய்யுங்கள்
குறைந்த லாபத்தில் விற்பனை செய்வதால் அதிகமான வாடிக்கையாளர்களை தொடர்ந்து நம்மிடம் தக்க வைத்து கொள்ளலாம்
மொத்த கொள்முதல் செய்யும் போது தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்வது நல்லது ஏனெனில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான , புதிய காய்கறிகளை தொடந்து வழங்கினால் அவர்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும்
சில நாட்கள் கழித்து சாம்பார், குழம்பு, பொரியல், கூட்டு செய்ய தகுந்தவாறு காய்கறிகளை வெட்டி
1 / 4 கிலோ
1 / 2 கிலோ
3 / 4 கிலோ அளவுகளில் பாக்கெட் செய்து விற்பனை செய்யலாம் பாக்கெட் காய்கறிகளை கொஞ்சம் அதிக லாபத்தில் விற்கலாம்
வாடிக்கையாளர் தேவைக்கேற்ப
கீரை வகைகள், இட்லி மாவு, ரெடிமேட் சப்பாத்தி, சுத்தமான பசும்பால், போன்ற பொருட்களை விற்பனை செய்து லாபத்தை பெருக்கிக் கொள்ளலாம்.
காசுக்காக தரம் இல்லாத பொருட்களை விற்று விடாதீர்கள்
வாரம் ஒன்று அல்லது இரு முறை ஏதாவது சலுகைகள் வழங்குங்கள்
- : உதாரணம் :-
ரூ. 50 மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ. 2 மதிப்புள்ள Surf Excel - ஐ இலவசமாக தருவது.
ரூ. 100 மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ. 5 மதிப்புள்ள எவர்சில்வர் ஸ்பூன் இலவசமாக தரலாம்.
ரூ. 200 மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ. 10 மதிப்புள்ள சாம்பார் பொடி இலவசம்.
உங்கள் ஓய்வு நேரத்தை
பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டுங்கள்
கேட்க
https://youtu.be/JQPm4M4QXnU
சந்தேகங்களுக்கு மற்றும் ஆலோசனைகளுக்கு : -
publicbazaar@gmail.com
மின்னஞ்சல் செய்யவும்
நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக