வணக்கம்,
இந்த பதிவில்
டிராவல் ஏஜெண்ட் தொழில் பற்றி பார்க்க இருக்கிறோம்.
பொதுவாக போக்குவரத்து வாகனங்கள் இரண்டு விதமாக பயன்படுகின்றன
1. மக்கள் போக்குவரத்திற்கு
2. பொருட்களை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும்
இதில் மக்கள் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கும் டிராவல்ஸ் தொழிலை ஏஜெண்ட் ஆக செய்வதின் மூலம் நல்ல வருமானத்தை உங்கள் உழைப்பின் மூலம் பெறலாம்.
இந்த தொழிலை துவங்க சொந்தமாக கார், வேன்,
டெம்போ டிராவலர்,
ஆம்னி பஸ், போன்ற வாகனங்களை சொந்தமாக வைத்து உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களோடு இணைந்து செய்ய வேண்டும்.
டிராவல்ஸ் ஏஜென்ட் ஆக செயல்பட விரும்புகிறேன் என்று உங்களை அறிமுகம் செய்து கொண்டு அவர்கள் நிறுவனத்திற்கு பயணிகளை ஏற்பாடு செய்து தருவதற்கு எவ்வளவு கமிஷன் மற்றும் அந்த நிறுவனத்தோடு இணைந்து செயல்பட உள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்ன என்பதை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு இணைந்து செயல் படுங்கள்.
சரி, உங்களை தேடி வாடிக்கையாளர்களை வர வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
1. விசிட்டிங் கார்டு அச்சிட்டு உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் வழங்குவது
2. நோட்டீஸ் அச்சிட்டு பேப்பர் ஏஜெண்ட் மூலம் உங்கள் பகுதி முழுவதும் வினியோகம் செய்யலாம்
3. நோட்டீஸ் அச்சிட்டு வாகனங்களில் சொருகுவது
4. நோட்டீஸ்களை உங்கள் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வினியோகம் செய்தல்
5. உங்களது தொழிலை பற்றி பேஸ்புக், வாட்ஸ் ஆப், போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளுதல்.
மக்கள் உங்கள் நோட்டீஸை தூக்கி எறியாதவாறு வடிவமைக்கவும்.
உதாரணமாக : -
நீங்கள் அச்சிடும் விசிட்டிங் கார்டு, நோட்டீஸ்களில் உங்களை பற்றிய தகவல் ஒரு பக்கமும் மறு பக்கம்
உங்கள் பகுதியில் மொபைல் பஞ்சர் சர்வீஸ் செய்வோரின் செல் நம்பரை அச்சிட்டு கொடுத்தால் உங்கள் விசிட்டிங் கார்டு, நோட்டீஸ்களை யாரும் வீச மாட்டார்கள் .
இந்த தொழிலில் உள்ள வேறு வருமான வாய்ப்புகள்
பஸ், ரயில், விமான, கப்பல், சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து கொடுப்பது .
ஆரம்பத்தில் சிறிய சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து தரலாம்.
உதாரணமாக : -
2 நாட்கள் ஊட்டி சுற்றுலா + தங்குமிடம் + உணவு என அனைத்து செலவும் உட்பட ஒரு நபருக்கு என்ன செலவு என விசாரித்து நன்கு திட்டமிட்டு அதனை A4 அளவுள்ள அட்டையில் அச்சிட்டு அதனை உங்கள் பகுதி முழுவதும் விளம்பரம் செய்யுங்கள்.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட
2-வது அல்லது 4 - வது சனி, ஞாயிறு கிழமைகளில் அமைத்து கொண்டால் உங்களுக்கும் வசதியாக இருக்கும் வாடிக்கையாளர்களும் மறக்க மார்ட்டர்கள்.
எல்லா தொழில் துறையிலும் அடிக்கடி புதிய மாற்றங்கள் வந்து கொண்டே உள்ளது எனவே
இந்த தொழிலில் உள்ள அரசாங்க அனுமதி, விதிமுறைகள் என்னென்ன என்பதை நன்கு விசாரித்து தெரிந்து கொள்வதும் முக்கியம். வாடிக்கையாளரின் அனைத்து சந்தேகத்திற்கு பதில் சொல்லவும், அதற்கு தகுந்தவாறு திட்டமிடவும் உங்களுக்கும் உதவியாக இருக்கும்.
உழைப்பு என்றும் வீண் போவதில்லை.
மேலும் தொடர்புக்கு
publicbazaar@gmail.com
நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக