டீ விற்பனை பாகம் 2
கடை வைத்து டீ விற்பனை செய்வதை நேற்று பார்த்தோம் அதற்கு முதலீடு ரூ.50,000 முதல் ரூ.1,00,000 ஆகும்
இன்று அதே தொழிலை ரூ.5000 முதல் ரூ.25000 முதலீட்டில் பார்க்க போகிறோம்
ஆனால் தினசரி வருமானம்
ரூ.1000 மற்றும் அதற்கு மேலும்,
நல்ல தரமான, சுவையான
டீ - யை நீங்களே வீட்டில் தயார் செய்து சைக்கிளில் அல்லது
TVS XL SUPER வண்டியில்
டீ - கேன்களில் வைத்து விற்பனை செய்யலாம்
டீ - விற்பனைக்கு வாய்ப்புள்ள இடங்கள் புதிய கட்டிட வேலை நடைபெறும் இடங்கள், தொழிற்சாலை பகுதிகள், பூங்கா, I.T நிறுவனங்கள், காய்கறி, பழ சந்தைகள், உழவர் சந்தை,
சனி, ஞாயிறு கிழமைகளில் விளையாட்டு மைதானங்களிலும்,
மற்றும் இரவு வேலை நடைபெறும் இடங்களை தெரிந்து கொண்டு அங்கே சென்று விற்பனை செய்யலாம் .
உங்களிடம் தினமும் 100 முதல் 250 வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொண்டால் தினசரி
ரூ.1000 வருமானம் நிச்சயம்
தொழிலை பெரிதுபடுத்த அதிக வருமானம் சம்பாதிக்க
தினமும் உங்களின் வருமானத்தில் இருந்து ரூ.100 சேமித்து வையுங்கள்
300 நாட்கள் X ரூ.100 = ரூ.30,000
இந்த பணத்தில் 6 சைக்கிள் +
6 டீ - கேன்கள் வாங்கி 6 நபர்களுக்கு நீங்கள் வேலை தரலாம் அல்லது சம்பளம் + கமிஷன் தரலாம், சம்பளம் + கமிஷன் என்கிறபோது நல்ல உற்சாகத்துடன் வேலை செய்வார்கள்
TVS XL - SUPER வண்டியில்
Warmer - ஐ பொருத்தலாம் ( இதற்கு தனி பெரிய பேட்டரி பொருத்த வேண்டும் )
( Warmer உள்ளே வைக்கும் வடை, பஜ்ஜி, போண்டா, பப்ஸ், சமோசா, போன்றவை சூடாக இருக்கும் )
சூடான, சுவையான, டீ + பஜ்ஜி, போண்டா அதுவும் வாடிக்கையாளர் இடம் தேடி சென்று, இதை செய்தால் வாடிக்கையாளர் உங்களை விட்டு போகவே மாட்டார் கேள்விப்பட்ட வரை இதுவரை யாரும் இதை செய்தது இல்லை
திட்டமிட்டு உழைத்தால் வருமானம் உறுதி
கேட்க
https://youtu.be/DArNL3_rQks
நன்றி வணக்கம்.
கருத்துகள்
கருத்துரையிடுக