வணக்கம்,
டீ கடை ஆரம்பிங்க
தினமும்
ரூ.1000 சம்பாதிங்க
அமைதியான, சுத்தமான, டூ-வீலர் நிறுத்த வசதியான ஒரு இடத்தில் ( ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தாலும் பரவாயில்லை )
50 அல்லது100 சதுர அடி அளவில் ஒரு கடை வாடகைக்கு எடுத்து கொள்க
4 சேர் 1 டேபிள் வாங்கினால் போதுமானது
வித்தியாசமான அளவில், அழகில் டீ டம்ளர் தயார் செய்து கொள்க
கடைக்கு ஒரு நல்ல பெயரா வைங்க
கடைக்கு பெரிய அளவில் போர்டு வைங்க அதிக வார்த்தைகள் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
நல்ல தரம், சுவை, சரியான அளவில் டீ கொடுங்க
உங்களுக்கே டீ போட தெரிஞ்சா டீ மாஸ்டர் சம்பளம் தினசரி மிச்சம்
கடையை விளம்பரம் செய்யுங்கள்
உங்கள் பகுதியில் அதிக மக்கள் தொகை இருந்தால் ஒரு 5000 நோட்டீஸ் அச்சிட்டு வீடு வீடாக சென்று வழங்குங்கள்
பேப்பரில் வைத்தும் கொடுக்கலாம்
3 மாதம் கழித்து
டீ விற்பனையில் மட்டுமே தினமும் ரூ. 1000 வருமானம் கிடைக்கும்
அதன் பிறகு போன்டா, பஜ்ஜி செய்து விற்கலாம் அந்த லாபம் தனி உங்கள் கடை இருக்கும் இடம் தெரிந்த உடன் கோக், பெப்ஸி, பன், கேக், விற்பனை செய்து இன்னும் அதிக வருமானம் பெறலாம் .
இந்த தொழிலைப் பற்றி இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் சொல்கிறேன்
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக